search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை"

    இந்தியாவில் தற்போது 18 ஆயிரம் ரோகிங்கியா அகதிகள் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. #UNHCR #Rohingya
    ஜெனிவா :

    பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அந்நாட்டில் உள்ள ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிங்ய இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது.

    பௌத்தர்களால் ரோகிங்யா இனத்தவர்கள் குறிவைத்துப் தாக்குதல் மற்றும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு பெரும்பாலான ரோகிங்யா மக்கள் அகதிகளாகப் படையெடுத்தனர்.

    அவ்வாறு அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு வந்த ரோகிங்கிய அகதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அங்காங்கே வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 18 ஆயிரம் ரோகிங்கிய அகதிகள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கியா நாடுகள் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கியா நாடுகள் அகதிகள் முகமையில் பதிவு செய்துள்ளனர்.

    மேலும், கைது நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வசித்து வந்த ரோகிங்யா அகதிகள் 7 பேர் மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #UNHCR #Rohingya
    ×